பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம்.ஏனெனில்,அது புத்திசாலித்தனமான முதலீடாக பார்க்கப்படுகிறது.ஆனால்,தங்கம் விலையை பொறுத்தவரை, நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமாக உள்ளது.
இதனிடையே,ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரால் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றனர் இதனால் பங்குசந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக தங்கம் விலையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 அதிகரித்தும்,22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்தும் காணப்பட்டது.
இந்நிலையில்,சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து,ரூ.4,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து,ஒரு சவரன் ரூ.39,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம்,சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…