#BREAKING : நாங்குநேரி சென்று கருத்துக்கள் கேட்கப்படும் – நீதியரசர் சந்துரு
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது தங்கை இருவரும் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.
இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நீதியரசர் சந்துரு அவர்கள், நாங்குநேரி சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்படும்; மாணவன் படித்த பள்ளி, மற்றும் வீடு, சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தப்படும்; தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு எதிராக வன்கொடுமை நடைபெற்று வழக்கு பதிவு செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.