#BREAKING: நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் – ஐகோர்ட்
நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொள்வோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. நிவாரணம் வழங்கும் அரசு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு, அரசியல் கட்சிகள் நிதி, வேலை தருவதாக கூறுவது தற்கொலையை ஊக்குவிப்பது போல் உள்ளது.
வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளனர். தற்கொலையை தடுக்கும் உத்தரவை அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் முறையிட்டுள்ளார். தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியப்பிரகாசத்துக்கு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தமிழகத்தில் ஒரே நாளில் நீட் தேர்வு அச்சத்தால் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.