திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு.
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 5-ஆம் வகுப்பு சிறுமி பள்ளி அருகே உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பள்ளி அருகே தீயில் கருகி இறந்து கிடந்த சிறுமி வழக்கில் மர்மம் நீடிக்கும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியை அடுத்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவரின் 9 வயது மகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி, அதன்பிறகு காணவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுமி கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் பள்ளி வளாகத்திலேயே உடல் எறிந்த நிலையில், அந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் சிறுமி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை தமிழக டிஜிபி சிபிசிஐடி க்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…