சேலம் அருகே தலை துண்டித்து சிறுமியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது போக்சோ நீதிமன்றம்.
சேலம் ஆத்தூர் அருகே சுந்திரபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக இளைஞர் தினேஷ்குமார் மீது கொலை, பாலியல் தொல்லை, தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவரை ஆத்தூர் போலீஸ் கைது செய்திருந்தது.
பாலியல் தொல்லையை வீட்டில் சொல்ல போவதாக கூறிய சிறுமியின் தலை துண்டிக்கப்பட்டு, தினேஷ்குமார் என்பவர் கொலை செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையானது சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. குற்றவாளி 100% குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்ட பிறகு, போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், குற்றவாளி தினேஷ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்ட பிறகு, சேலத்தில் விதிக்கப்பட்ட முதல் தூக்கு தண்டனை இதுவாகும். குற்றவாளி தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தில் தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு நீதிமன்ற வளாகம் மற்றும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…