#Breaking: கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி!

Default Image

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஏற்கனவே ஜூன் 14-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளகுறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இந்த 27 மாவட்டங்களுக்கு இடையே உள்ள மக்கள் திருமண நிகழ்வுகளுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான இ-பாஸ் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இணைய வழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காரணங்களுக்காக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு பயணிப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
Nitish Kumar vaibhav suryavanshi
Deputy CM Udhayanidhi stalin
Madurai Pvt Play school
Edappadi Palanisamy criticized TN CM MK Stalin
Pollachi
4 year old child died