#BREAKING : பொதுக்குழு முடிவு – தேர்தல் ஆணையத்தில் நேரில் தாக்கல் செய்தார் சி.வி.சண்முகம்..!
பொதுக்குழு முடிவுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் நேரில் சந்தித்து சிவி சண்முகம் வழங்கினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்ததோடு, மொத்தம் 16 தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 11- ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வானது, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்த தீர்மானத்தை மின்னஞ்சல் மூலமாக தகவல் அளித்திருந்த நிலையில், தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் நேரில் சந்தித்து, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள் தீர்மானங்கள் அளித்தார். மேலும், அதிமுக சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.