#BREAKING : பொதுக்குழு – நேற்று அனுப்பப்பட்ட 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் – ஓபிஎஸ் தரப்பு
23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழுவுக்கு, கட்சி விதிகளை திருத்துவதற்கு தடை கோரியும் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன்,சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுகுளுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு, பொதுக்குழுவுக்கே உள்ளது. பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது. நாளை கட்சி சட்ட விதிகளில் திருத்தம் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும். பெரும்பான்மையே முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், கடந்த டிசம்பரில் உட்கட்சி தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.
23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் வந்தது. கட்சி அலுவலகத்தில் இருந்து வந்த 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.