#BREAKING : விநாயகர் சதூர்த்தி – அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம்

Default Image

விநாயகர் சதூர்த்தி விவகாரத்தில், அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். 

சென்னையை சேர்ந்த இல.கணபதி என்பவர், சென்னை  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் கடந்த 30-ஆம் தேதி, தமிழக அரசு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுதிக்குமாறும்  கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி  ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்சம் 5 பேராவது அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின் வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, மதஉரிமைகளை பின்பற்ற வாழ்வாதார உரிமை முக்கியமானது என்றும், பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்