#BREAKING: வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம் – தமிழக அரசு
பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, பல இடங்களில் சிலைகள் செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சிலை பொது இடங்களில் வைக்க, ஊர்வலம் செல்ல தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது. கொரானாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும் அரசின் ஆணையை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
#BREAKING: வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம் – தமிழக அரசு#GaneshChaturthi2020 | #TNGovt pic.twitter.com/41t80gDBKo
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 20, 2020