மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மறு பிரேத பரிசோதனை முடிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டு தற்போது அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. உடலை பெற்று இன்றே மாணவிக்கு இறுதிச்சடங்கு நடத்த பெற்றோர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கடந்த 13-ஆம் தேதி சின்னசேலம் கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுந்திருந்தனர். பெற்றோர் விருப்பப்படி மாணவியின் உடல் மறு கூராய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் மறு கூராய்வு செய்யும்போது தங்கள் மருத்துவரை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், இதற்கு அனுமதி கிடையாது என நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனைதொடர்த்து, மாணவி மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தந்தை ராமலிங்கம் நாடினர். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சென்ற 14-ஆம் தேதி முதல் மருத்துவ உடற்கூறாய்வு நடைபெற்றது. இதன்பின் நீதிமன்ற உத்தரவுக்கு பின் மீண்டும் நேற்று முன்தினம் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…