#breaking: மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று முழு ஊரடங்கு – தமிழக அரசு
வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தாக கூறப்படுகிறது. தொழிலாளர் தினத்துக்கு பொதுவிடுமுறை என்பதால் மே 1ல் சனிக்கிழமை அன்று முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை என்றும் கூறியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போடுவதால் சனிக்கிழமை அன்று முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் நாளில் உரிய பாஸ் வைத்திருப்பவர்கள் தான் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு தனது இறுதி முடிவை நாளை தெரிவிக்க உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 01, 02-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.