பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு இடம் பெறும்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்தனர். இதனையடுத்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி 20 பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் முழுக்கரும்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…