#BREAKING : பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி

Default Image

பொங்கல்  பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு இடம் பெறும்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்தனர். இதனையடுத்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், பொங்கல்  பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி 20 பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் முழுக்கரும்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்