சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்,தற்போது தொடங்கி வைத்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், புதிய மின் இணைப்புக்காக, தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்,தற்போது தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இதனையடுத்து,பேசிய முதல்வர்:”அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவில்லை, பொறுப்பேற்றுள்ளேன்.கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் 2,09,910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது.கடந்த 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் 2,09,910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது.
ஆனால்,அதிமுக ஆட்சியில் 2011 – 2016 காலத்தில் 82,987 பேருக்கும், 2016-21 காலக்கட்டத்தில் 1,38,592 பேருக்கும்தான் புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன.அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான்.மின்சார வாரியத்தை அதிமுக ஆட்சி சீரழித்து விட்டது. நாட்டிலேயே விரைவாக செயல்படக் கூடியது திமுக அரசுதான்.குறிப்பாக, திமுக உழவர்களுக்கான அரசு.ஏனெனில்,அமைச்சர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும்,1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மாதம் 25 ஆயிரம் என்று நான்கு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்.சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம்.அதன்படி,திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின்பூங்கா அமைக்கப்படவுள்ளது.புதிய மின் திட்டங்களை திட்டமிட்டுள்ளோம். 17,980 மெகா வாட் மின்சாரத்தை வரும் 10 ஆண்டு காலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது.”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…