#BREAKING: மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு

Default Image

சென்னையில் முதியோர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வரும் 21ம் தேதி டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு.

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும்போது மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் குறித்து போக்குவரத்து கழக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் வரும் 21ம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராயநகர் மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட கிட்டத்தட்ட 40 பணி மனைகளில் டோக்கன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டணமில்லா டோக்கன்களை பயன்படுத்தி 6 மாதங்கள் வரை பயணிக்கலாம். மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் ஜன-ஜூன் வரை 6 மாதத்திற்கு பயன்படுத்தும் வகையில் டோக்கன் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டமானது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2016ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் 60 வயது நிறைவு மற்றும் இருப்பிடச் சான்றை கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் அனுகி, மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் 3 மாதங்களுக்கு பயன்படுத்துகின்ற வகையில் கட்டணமில்லா பயனர் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்