#BREAKING: முன்னாள் எம்எல்ஏ சரவணன் அதிமுகவில் இணைந்தார்!
பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார்.
பாஜகவில் இருந்து விலகிய திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் சரவணன் அதிமுகவில் இணைந்தார். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார் சரவணன். திமுகவில் இருந்தபோது எம்எல்ஏவாக இருந்த சரவணன், பின்னர் பாஜகவில் சேர்ந்து, தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.