அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து,முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.அதில்,தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறைகளை பின்பற்றாமல் விசாரிக்கிறது என்று தெரிவித்தார். மேலும்,இந்த வழக்கில் முன்னதாக நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73% சொத்துசேர்த்துள்ளார் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.
இந்நிலையில்,இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும்,ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…