முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி தெரிவித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடைப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி செல்வகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மணிகண்டன் அமைச்சராக இருந்த போது புகாரளித்த பெண்ணுடன் ஒன்றாக தங்கியிருந்தது விசாரணையில் தெரிவந்துள்ளது.
புகாரளித்த பெண்ணை மிரட்டியுள்ளதாகவும், அப்பெண்ணின் புகைப்படத்தை வாட்சப் மூலம் அனுப்பி மிரட்டியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, மணிகண்டன் அவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஆதாரங்கள் இல்லாமலும், விசாரணையை முடிக்காமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த தீர்ப்பளிக்கயிருந்த நிலையில், தற்போது மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…