#BREAKING: மார்ச் 11 வரை முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு சிறை!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு.

ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை நில அபகரிப்பு செய்யப்பட்ட மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 6 பிரிவில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட பிறகு இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவலுக்கு உள்ளாக்க கூடாது என ஜெயக்குமார் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தான் என்னை கைது செய்துள்ளார்கள் என்று நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வாதாடினார். இதன்பின் ஜெயக்குமார் மீது கொள்ளை பிரிவும் சேர்க்கப்பட்டு, மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது  திமுக தொண்டரை தாக்கியது, சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக ஜெயக்குமார் மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த 19 ஆம் தேதி சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதன் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெளுத்து வாங்கும் கனமழை..இன்று இந்த 17 மாவட்டத்திற்கு அலர்ட்!

வெளுத்து வாங்கும் கனமழை..இன்று இந்த 17 மாவட்டத்திற்கு அலர்ட்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…

24 minutes ago

கடும் எதிர்ப்பு… மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்டத் திருத்த மசோதா!

புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

41 minutes ago

லியோவை பார்க்கணுமா? பார்முக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர்..23.75 கோடி வேலை செய்யுது!

கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…

53 minutes ago

KKR vs SRH : மிரட்டல் பந்துவீச்சு., கொல்கத்தா அபார வெற்றி! SRH ‘ஆல் அவுட்’ படுதோல்வி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

8 hours ago

சடசடவென சரிந்த SRH-ன் ‘டைனோசர்’ கூட்டணி! வெற்றி களிப்பில் கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…

9 hours ago

KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…

10 hours ago