#BREAKING: அமைச்சர் பொன்முடி வீட்டில் தடய அறிவியல் சோதனை!
சென்னையில் சோதனை நடைபெறும் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு தடவியல் சோதனை நடைபெறுகிறது.
செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
விழுப்புரத்தில் பதியப்பட்டுள்ள வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எனவே, மத்திய பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் தடய அறிவியல் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் சோதனை நடைபெறும் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வருகை புரிந்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தடயவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. கணினியில் இருந்த ஆவணங்களை அழித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தடயவியல் சோதனை நடைபெறுகிறது. ஆவணங்களில் உள்ள கையெழுத்துக்களை தடயவியல் நிபுணர்கள் சரி பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.