#Breaking:முதல் முறை….25,000 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் இன்றுடன் பணி ஓய்வு!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக மாற்றப்பட்ட நிலையில்,தற்போது முதல்முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர்.
புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.ஏற்கனவே,மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 25,000 பணியிடங்கள் காலியாகிறது.இதனைத் தொடர்ந்து,இந்த காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படவுள்ளது.