நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள என தமிழ்நாடு அரசு உத்தரவு.
நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு விழாக்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க ஆணையிட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஆலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த ஆணையிட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தொழில் மற்றும் வணிக வரித்துறை ஆணையகம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டுப்புற கலைகளை பாதுகாத்திடவும், கலைஞர்களின் வாழ்வினை செம்மைப்படுத்திடவும், கலைகளை மக்களிடம் பரப்பி அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…