சென்னையில் பறக்கும் ரயில் சேவைகள் ரத்து!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். அப்பொழுது அவர் மக்கள் அனைவரும் ஊடரங்கு உத்தரவை பிறப்பிக்கிமாறு கூறினார். அதனால் சென்னையில் கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே நாளை ரத்து செய்துள்ளது.