குட்நியூஸ்…வெள்ள தடுப்பு பணி;ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு!
வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையில்,வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் சுற்றுச்சூழல்,நகர்ப்புற திட்டமிடல்,பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில்,திருப்புகழ் IAS குழு அளித்த அறிக்கையின் படி சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.184.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:”தமிழ்நாட்டில் 2021 வடகிழக்கு பருவமழையின் போது, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் குறுகிய இடைவெளியில் பெரிய அளவில் மழை பெய்தது,இது பெரும் வெள்ளத்திற்கு வழிவகுத்தது.இதனையடுத்து, வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு முதலமைச்சர் வருகை தந்ததுடன் திருப்புகழ் தலைமையிலான குழு ஆய்வு செய்ததன் அடிப்படையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.184.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.