#BREAKING: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Default Image

பூண்டி ஏரியிலிருந்து மதியம் 2 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுவதால் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நீர்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 33.95 அடியாகவும் கொள்ளளவு 2807 மிலிலியன் கன அடியாகவும் உள்ளது. பூண்டியில் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 1691 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து இன்று பிற்பகல் 2.00 மணி அளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில், கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும். எனவே, நீர் தேகத்தில் இருந்து மிகை நீர் வெளியேறும் போது கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான திருவள்ளூர் மாவட்டத்தில் 30 கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்