சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிக புகை இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ மற்ற வார்டுகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் சிகிச்சை பிரிவில் 3 நோயாளிகள் இருந்த நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட இடம் புகை மூட்டமாக காணப்படும் நிலையில் திடீரென ஒரு சிலிண்டர் வெடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மின் விபத்து ஏற்பட்ட பகுதியில் நோயாளிகள் யாரும் இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…