#BREAKING: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் 6,20,41,179 வாக்காளர்கள்…
தமிழகத்தில் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளதாக மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு. கடந்த ஆண்டு நவம்பர் 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் (மாவட்ட வாரியாக) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 3.04 (3,04,89,866) கோடி ஆண், 3.15 (3,15,43,286) கோடி பெண் மற்றும் 8,027 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 3.82 கோடி வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதி துறைமுகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர்த்தல், நீக்கல், திருத்தங்களுக்கு பிறகு புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தும் செய்யவும் இனியும் வாய்ப்பு உள்ளது எனவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.