#BREAKING: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தலைமை தேர்தல் அதிகாரி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு.
2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிட்டியிருந்தது. ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேராக இருந்தது. அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர் ஆண்கள். 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பெண்கள் உள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தும் மேற்கொள்ளவதற்காக, சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. இதில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பங்கள் முழுவதுமாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டியிருந்தது.
இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை திருத்த பணிகள் நிறைவடைந்துள்ளதையொட்டி இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் புதிதாக 10 லட்சத்து 17 ஆயிரத்து 456 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.23 கோடி பெண் வாக்காளர்கள், 3.13 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,804 மூன்றாம் பாலின வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று தலைமை அதிகாரி வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – மாநில தேர்தல் ஆணையம்!#tngovt #ElectionCommission #voterlist pic.twitter.com/U1l1nOJFzP
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) January 5, 2022