சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக சார்பில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானது,மிகவும் வேதனைக்குரியதுமாகும்.
இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது.குடும்பத்தின் இரண்டு தூண்களாய் இருந்த தந்தை மகனையும் இழந்து வாடும் அக்குடும்பத்தினருக்கும் அதிமுக தனது ஆழ்ந்த இரங்கலையும் ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறது.அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…