#BREAKING: போலி சான்றிதழ் – 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!
தஞ்சை பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் அளித்த 7 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பரிந்துரை.
தஞ்சை பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வுக்காக 7 ஊழியர்கள் போலி சான்றிதழ் தந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வு எழுதி தேர்வானதாக போலிச்சான்று தந்து பதவி உயர்வு பெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியர்கள் 7 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ( DoTE ) பரிந்துரை செய்துள்ளது.
பதவி உயர்வு பெற 7 பணியாளர்கள், தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்றதாக போலி சான்றிதழை சமர்பித்ததாக குற்றசாட்டு எழுந்த நிலையில், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் பெற உதவிய தனியார் தட்டச்சு பயிற்சி நிறுவனத்தின் உரிமைத்தையும் ரத்து செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், பல ஊழியர்கள் போலீசன்று தந்து அரசுப்பணிகளில் தொடர்வதும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.