#BREAKING: மதுரையில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு
மதுரையில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மதுரையில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அங்கு மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3423 ஆக உள்ளது.மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 24 தேதி முதல் 5-ஆம் தேதி வரை அங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜூலை 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார் .மதுரை மாநகராட்சி,பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு#coronalockdown | #COVID19India | #Madurai | @CMOTamilNadu pic.twitter.com/h6axrPdnUg
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 4, 2020