#BREAKING: எஸ்ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், மேலும் 10 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு ( Sub Inspector ) விண்ணப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. காவல் உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் 10 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இணையதள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை முதல் விண்ணப்பம் பதிவேற்றுவதில் பிரச்சனை இருந்து வந்ததால், அவக்சம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எனவே, இந்த பணிக்காக விண்ணப்பிக்க செய்ய விரும்புவோருக்கு இந்த கால அவகாசம் நீட்டிப்பு என்பது மகிச்சியளிக்கக்கூடிய விஷயமாகும். தமிழகம் முழுவதும் 444 எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025