#BREAKING: அம்மா உணவகங்களில் இலவச உணவு காலம் நீட்டிப்பு.!
ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க இருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் மக்களுக்காக பல்வேறு தரப்பினர் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றன. மேலும், வறுமையில் வாடும் மக்களுக்கு சில மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க இருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
நேற்று சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் மே 31 வரை இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.