#BREAKING: அரசுப் பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணி வர விலக்கு நீட்டிப்பு ..!
இந்த ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன், அரசு அலுவலகங்கள் 30% அரசு ஊழியர்களுடன் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் கடந்த 6-ஆம் வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்களித்துள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து வரும் 13-ஆம் வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு.
கொரோனா பரவல் காரணமாக வரும் 14-ஆம் தேதி காலை 6.00 மணி முழு வரை ஊரடங்கு நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன், அரசு அலுவலகங்கள் 30% அரசு ஊழியர்களுடன் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில்கொண்டு கடந்த 6-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு வரும் 13-ஆம் வரை மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கையை ஏற்று மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு ஏற்கனவே கடந்த 6-ஆம் வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்துள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து வரும் 13-ஆம் வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசுப் பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு..! pic.twitter.com/vje38BsJbm
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 8, 2021