#BREAKING: பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து..! 4 பேர் பலி..!
கிருஷ்ணகிரியில் உள்ள பழைய பேட்டையில் தனியார் பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதன்பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் குடோன் உட்பட அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன.