#Breaking : கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு!
- தமிழகத்தில் ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
- கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய 7 மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு
தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.
- கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.