சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைப்பெறுகிறது.
மேலும்,இந்த வேட்புமனு தாக்கல் நாளை பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,ஓபிஎஸ்,ஈபிஎஸ் நாளை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி,அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும்,முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன்னர் தேர்தல் தொடர்பான நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றவில்லை எனவும்,பொதுச்செயலாளர் பதவியை அபகரிக்கும் முயற்சி மற்றும் ஒற்றைத் தலைமை என்ற மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கருத்துக்கு எதிராக இது உள்ளது என்றும்,எனவே,ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…