#Breaking:பரபரப்பு…நீலகிரியில் ராணுவ ஹெலிஹாப்டர் விபத்து – 4 பேர் பலி;3பேர் படுகாயம்!

Default Image

நீலகிரி:ராணுவ ஹெலிஹாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட நான்கு பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும்,அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை.இதனையடுத்து,மீட்பு படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில்,மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்,நான்கு உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்துள்ளதாகவும்,இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.இது தொடர்பான முழுமையான விவரங்கள் பின்னர் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - Trump - Zelensky Meeting
Australia semi-finals
LPGPriceHike
Seeman
Mayiladurai Collector Mahabharathi transfer
Ajith in Good bad Ugly teaser
AFGvAUS - 1st innings