#Breaking:பரபரப்பு…சட்டப் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!
மயிலாடுதுறையில் நேற்று ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டதைக் கண்டித்து சட்டப் பேரவையில் இருந்து தற்போது அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.குறிப்பாக,தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதனிடையே,ஆளுநருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தமிழக காவல்துறையின் மீது விழுந்த கரும்புள்ளி என்று சட்டப் பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில்,ஆளுநர் வாகனம் செல்லும் வழியில் இருந்த போராட்டக்காரர்கள் முன்பே அப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,பேரவையில் தொடர் முழக்கங்களை எழுப்பிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்நிலையில்,மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கமளித்து வருகிறார்.பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆளுநர் தரப்பில் தமிழக டிஜிபிக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் முதல்வர் விளக்கமளிக்கிறார்.