#BREAKING : செம்பரம்பாக்கத்தில் உபரி நீர் திறப்பு..! 1,000-த்தில் இருந்து 2,000 கன அடியாக உயர்வு…!
செம்பரம்பாக்கத்தில் உபரி நீர் திறப்பு 1,000-த்தில் இருந்து 2,000 கன அடியாக உயர்வு.
காஞ்சிபுரம் : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பியுள்ளன. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியதால், ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1:30 மணிக்கு 500 கன அடி திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் 21.45 அடியாக உள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 1,000 கன அடியாக திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது 1,000-த்தில் இருந்து 2,000 கன அடியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.