#BREAKING: அனைவரும் ஒற்றை தலைமையை விரும்புகின்றனர் – தமிழ்மகன் உசேன்
அதிமுகவில் அனைவரும் ஒற்றை தலைமையை விரும்புகின்றனர் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி.
அதிமுகவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுகவில் அனைவரும் ஒற்றை தலைமையை விரும்புகின்றனர். அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமையேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சவாலான பணி என்றாலும், அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி செல்வேன் என்றும் கூறினார். அதிமுக இயக்கத்தை எம்ஜிஆர் ஆரம்பித்த போது உடனிருந்தவர் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் என்பது குறிப்பிடப்படுகிறது. தமிழ்மகன் உசேனுடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமை தீர்மானம் ஜூலை 11ம் தேதி கட்டாயம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அதிமுக நிர்வாகிகள் தலைவர்கள் இன்றும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.