#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் – போட்டியுமில்லை.. ஆதரவுமில்லை..! – அன்புமணி ராமதாஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் போட்டியிடவுமில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக தலைமை அறிவிப்பு.
பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் போட்டியிடவுமில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை.
பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம், இதுவே பாமகவின் நிலைப்பாடு. இன்று மாலை பாமக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர ஓபிஎஸ் திட்டமிட்டிருந்த நிலையில், யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.