#BREAKING: ஈரோடு இடைத்தேர்தல் – இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை பசுமைவழிசாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்து வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுகிறார் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் காலை வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்க உள்ளார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.