#Breaking : ஈரோடு இடைத்தேர்தல் – கமல் தலைமையில் ஆலோசனை..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கமலஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை
ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் பிப்.27-ஆம் தேதி இடைதேர்த்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மநீம கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனிடம் ஆதரவு கோரவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.