#BREAKING: ஈரோடு இடைத்தேர்தல் – பிரச்சாரத்துக்கு வந்தவர் உயிரிழப்பு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு அதிமுக நிர்வாகி உயிரிழப்பு.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில், அதிமுக, திமுக கூட்டணி காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரதான கட்சிகள் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை பணிகளுக்காக வந்த கடலூர் அதிமுகவைச் சேர்ந்த கந்தன், நெஞ்சுவலியால் உயிரிழந்தார் என தகவல் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி அக்ரஹாரம் பகுதியில் பரப்புரை செய்துகொண்டிருந்தபோது நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த கந்தன், பண்ருட்டி அண்ணா கிராமம் பகுதி அதிமுகவின் ஒன்றிய செயலாளரகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.