#BREAKING : 72 நாட்களுக்கு பின் அதிமுக அலுவலகம் சென்றார் ஈபிஎஸ்…!
72 நாட்களுக்கு பின் அதிமுக அலுவலகத்திற்கு சென்ற ஈபிஎஸ்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கலவரத்திற்கு பின், கடந்த ஜூலை 21-ஆம் தேதி அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 72 நாட்களுக்கு பின் ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இதற்கிடையில், ஈபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை அதிமுக அலுவலகத்திற்கு செல்ல அனுமதி வழங்க கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.