#BREAKING : சென்னை சொகுசு விடுதியில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்திப்பு….!
சென்னையில் உள்ள சொகுசு விடுதியில், ஓ.பன்னீர் செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்திக்கிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச் செயலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், நேற்று நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார். இதனால், அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று ஓபிஎஸ் உடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என ஈபிஎஸ் விளக்கமளித்திருந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள சொகுசு விடுதியில், ஓ.பன்னீர் செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்திக்கிறார். இந்த சந்திப்பானது தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை காட்டுவதற்காக தான் நடைபெறுவதாக கூறப்படுகிறது.