#Breaking:ஈபிஎஸ் பொதுச்செயலாளரா?…தருமம் மறுபடியும் வெல்லும் – ஓபிஎஸ் அதிரடி!

Published by
Edison

தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக,எம்ஜிஆர்,ஜெயலலிதா பின்பற்றிய விதிமுறைகளை பின்பற்றி நாளை ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில்,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடம் சென்ற அதிமுக தொண்டர்கள் சிலர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கோஷமிட்டும்,கட்சி பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் தகுதியானவர் அல்ல என்றும்,குறிப்பாக,அம்மா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர் என்றும் முழக்கமிட்டனர்.அப்போது,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அருகே தொண்டர்களில் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.ஆனால்,உடனே அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை மீட்டனர்.

இந்நிலையில்,தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,தருமம் மறுபடியும் வெல்லும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

“மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை,வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில்,”தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

4 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

52 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago