விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சில நாட்களாக சசிகலாவை அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்களும் தொடர்ந்து தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி வருகிறது. சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் பேசி வருவதால் அதிமுகவில் குழப்பமும் ஏற்படும் ஏற்படும் நிலை உள்ளதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் சமீபத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது, கட்சி உறுப்பினராக இல்லாத வரும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்கு கூட தகுதி இல்லாதவர் அதிமுக பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என கண்டனம் தெரிவித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…